வைரலாகும் ரஜினி ஐடியா நம்பர் 1..! - டிவிட்டரில் ட்ரெண்டாகும் #தலைவர்ரஜினியின்அரசியல்புரட்சி..!


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017 இறுதியில் அறிவித்த பின் இரண்டு வருடத்தில் அவரின் அரசியல் நோக்கத்திலும், திட்டத்திலும் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

அரசியல் குறித்த அவரின் மனமாற்றத்திற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கலாம் என்று பலரும் கூறி வந்தார்கள். அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினிகாந்தே கூறினார்.

அவர் கூறியதில் பிரதானமானதும், மக்களால் கவனிக்கப்படுவதும் ஒரு விஷயம் தான். அது தான் இந்த அரசியல் சிஸ்டம். பெரிய கட்சிகள் தேர்தலை சந்திக்க வட்டம், மாவட்டம், கிராமம், கிளை என 50,000-க்கும் மேற்பட்ட பதவிகளை உருவாக்கி விடுகின்றன.

அந்த பதவியில் இருப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் அதே பதவியில் தொடர்கிறார்கள். மக்களுக்கு செல்ல வேண்டிய திட்டங்களுக்கு தலையிடுகிறார்கள். அதை அவர்கள் தொழிலாகவே செய்கிறார்கள். காண்ட்ராக்ட் எடுப்பதில் இருந்து அரசிடம் இருந்து மக்களுக்கு செல்லும் திட்டத்திற்கு குறுக்கே வந்து நின்று கொண்டு அதில் இருந்து அவர்களால் முடிந்த அளவுக்கு சுரண்டி விடுகிறார்கள்.

இதனை சரி செய்தாலே அரசுக்கும், மக்களுக்குமான இடைவெளி குறைந்து விடும். அதனால், என்னுடைய கட்சியில் தேர்தலை சந்திக்கும் போதுஎ ன்னென்ன பொறுப்புகள் தேவையோ..? அத்தனை பொறுப்புகளையும் உருவாக்குவேன். ஆனால், தேர்தல் முடிந்த பின்பு கட்சியை நடத்த அத்தியாவசியமான பதவி என்னவோ அதை மட்டும் வைத்துக்கொள்வேன். 

இதற்கு சம்மதிப்பவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள். கட்சியில சேரனும் பணம் சம்பாதிக்கணும் என்று நினைப்பவர்கள் போய்கிட்டே இருங்க என்று ஒரே போடாக போட்டு விட்டார்.

நானும் கட்சி ஆரம்பிக்கிறேன் என வந்து 10%, 20% ஓட்டு வாங்குறதுக்கு நான் எதுக்கு அரசியலுக்கு வரனும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றால் அந்த நம்பிக்கையை எனக்கு கொடுங்கள். உங்களிடம் எழுச்சி தெரிந்தால் தான் என்னால் அரசியலுக்கு வரமுடியும். இல்லையென்றால், என்னை நம்பி பணத்தை செலவு செய்து தேர்தலில் நிற்பவர்களை நான் தெருவில் நிறுத்துவது போல ஆகிவிடும் என்று கூறினார்.

இதனை கிண்டல் அடித்து பேசுபவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். ஆனால், கிண்டல் செய்பவர்கள் விட ரஜினி பேசுவதன் சாராம்சத்தை புரிந்து கொண்டவர்கள் தான் அதிகம். இந்த எழுச்சி மக்களிடைய மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகின்றது. இதனை ரஜினி ரசிகர்கள் மற்றும் மாற்றத்தை விரும்புபவர்கள் செய்ய தொடங்கி விட்டார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு முதல் #தலைவர்ரஜினியின்அரசியல்புரட்சி என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் வருகிறார்கள்.
Blogger இயக்குவது.