"10 கோடி வசூல் - கொரோனாவை தடுக்க 1 கோடி கொடுத்தால் என்ன..?" - கேள்வி கேட்ட நபருக்கு திரௌபதி இயக்குனர் பளீர் பதில்..!
நாடக காதல், ஆவண கொலை, போலி பதிவு திருமணம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சமீபத்தில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'திரௌபதி'.
இந்த படத்தை இயக்குனர் மோகன் கிரௌட் பண்டிங் முறையில் இயக்கி இருந்தார். ரிஷி ரிச்சர்டு கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ஷீலா நாயகியாக நடித்திருந்தார். மேலும் கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலம் 10 ரூபாய் லாபம் மட்டும் வந்தது என படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் கூறியிருந்தார். இந்நிலையில் படத்தின் இயக்குனர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்க யாராவது முன்வந்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என டிவிட் போட்டிருந்தார்.
இந்த கருத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் திரௌபதி படம் ரூ 10 கோடி லாபம் வந்தது என்று சொன்னீர்கள், அதில் ஒரு கோடியை செலவு செய்தால் என்ன என ஏளனமாக கேட்டார்.
இதற்கு இயக்குனர் மோகன் ஜி பளார் பதில் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, படத்தை தயாரிப்பு விலைக்கு தான் விற்றேன், அதை முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப கொடுத்துவிட்டேன். லாபம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்குமே. உங்களுக்கு வேண்டும் என்றால் அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என அதிரடியாக கூறியுள்ளார்.