ரஜினி, அஜித், விஜய்யிடம் பிடித்த 3 முக்கியப் பண்புகள் இதுதான் - பட்டியலிட்ட பிரபல நடிகர்..! - வாவ்.!


தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் நகைச்சுவை நடிகர் விவேக். 1987-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்போது வரை பிரபல நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது, கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக சேவை செய்வதிலும் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார் விவேக்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில், அவர்களிடம் பிடித்த 3 முக்கிய பண்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் விவேக் கூறியது : எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள்.
1. யார் பற்றியும் அவதூறு பேசாதே - திரு. ரஜினிகாந்த்.
2.ignore negativity - திரு. விஜய்.
3.வாழு;வாழ விடு - திரு. அஜீத்
Blogger இயக்குவது.