அப்பாடா..! - சூர்யா-ஹரி 6-வது முறையாக இணையும் படத்தின் அறிவிப்பு வெளியானது - பெருமூச்சு விடும் ரசிகர்கள்


நடிகர் அஜித்தின் "விஸ்வாசம்" படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யாவின் 39-வது படம் உருவாகும் என கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அறிவித்தார்கள். 

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் சூர்யாவிற்கு சிவா இயக்கத்தில் உருவாகும் படம் திருப்புமுனையாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்தப் படம் ஆரம்பமாவதற்குள் சிவா, ரஜினிகாந்தின் 168வது படமான "அண்ணாத்த" படத்தை இயக்கப் போய்விட்டார். 

ஏற்கெனவே, பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த போது ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதற்காக விட்டுக் கொடுத்தார் சூர்யா. அதன், பின்னர்தான் கபாலி படம் உருவானது. கடந்த வருடம் மீண்டும் ரஜினிக்காக சிவாவை விட்டுக் கொடுத்தார் சூர்யா. 

இந்நிலையில் சூர்யாவின் 39வது படத்தை பற்றிய அறிவிப்பு நேற்று மாலை வெளியாகும் என அறிவித்தனர். இதையடுத்து சூர்யா ரசிகர்கள், சமூகவலைதளத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு டிரெண்ட்டிங்கிற்கு கொண்டு வந்தனர். 

சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சூர்யா உடனடியாக இந்தப் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம். ஹரி, சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் எங்கே சிங்கம் 4 என்று கூறி விடப்போகிறார்களோ என்ற பீதியில் தான் இருந்தனர் ரசிகர்கள். 

ஆனால், படத்தின் தலைப்பு "அருவா" எனதயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Post Comments

Blogger இயக்குவது.