பெண் பிள்ளைகளுக்கு நல்லதொரு விழிப்புணர்வு படம் "திரௌபதி" - சொன்னது யாருன்னு பாருங்க..!


நாடக காதலை தோலுறிக்கும் விதமாக வெளிவந்த திரைப்படமான திரௌபதி, வெளியீட்டிற்கு முன்னர் மிகவும் சர்ச்சை எதிர்கொண்ட திரைப்படம். ஆனால் படம் வெளிவந்த பிறகு பார்வையாளர்களிடமிருந்து நல்ல கருத்துக்களைப் பெற்றது. 

பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுத்தனர். பொதுமக்களின் எதிர்பார்ப்பை மீறி பெரிதாக எந்த சர்ச்சையையும் இந்த உருவாக்கவில்லை. 

நடிகர் ரிச்சர்ட் மற்றும் ஷீலா நடித்த திரௌபதி படத்தில் கருணாஸ் மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாதி மற்றும் சமூக அந்தஸ்தை ஒரு அடித்தளமாக வைத்திருப்பதன் மூலம் ரிச்சர்ட் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே கதை. 

வேறு சாதியை சேர்ந்த இரு காதலர்கள் திருமணத்திற்கு பின் நடக்கும் அதிர்ச்சியான சம்பவங்கள் மற்றும், திருமணத்திற்காக தயாரிக்கப்படும் போலி சான்றிதழ்கள், இதை மைய கருவாக வைத்து சிறந்த முறையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி. வெறும் 50 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் 10 நாட்களில் 14 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

பெரிய இயக்குனர், பெரிய நடிகர் என எதுவும் இல்லாமல் பெரிய ப்ரோமோஷன் எதுவும் இல்லாமல் வெளியான இந்த படம் இத்தனை கோடி வசூலித்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த படத்தை அமைச்சால் ராஜேந்திர பாலாஜி இயக்குனருடன் சேர்ந்து பார்த்து தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இன்று திரெளபதி படம் பார்த்தேன். பெண் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லதொரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது. இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் என கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.