குடும்பங்களின் பாராட்டு மழையில் "திரௌபதி" - மூன்றாம் நாள் எகிறிய வசூல் - இதோ வசூல் ரிப்போர்ட்..!


இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் நடித்து வெளிவந்த படம் "திரௌபதி". இப்படம் வெளிவருவதற்கு முன்பு பல விதமான சர்ச்சைகளில் சிக்கி பல எதிர்ப்புகளை தாண்டிய பின்பு தான் சென்ற வெள்ளிக்கிழமை அன்று இப்படம் திரைக்கு வந்தது. 

மேலும் இப்படம் வெளிவந்து தமிழகத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூலில் பல பல சாதனைகளை செய்து வருகிறது. குடும்பம் குடும்பமாக இந்த படத்தை பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், இப்படம் முதல் நாள் 2.76 கோடி மற்றும் இரண்டாம் நாள் 1.50 கோடி என இரண்டே நாளில் 4.26 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில், ஞாயிற்று கிழமை விடுமுறை தினமான நேற்று மட்டும் 1.78 கோடி வசூல் செய்து  இப்படம் 6.04 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வெறும் 50 லட்சம் பொருட்செலவில் க்ரவுட் ஃபண்டிங் முறையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மூன்றே நாளில் 6 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது கோலிவுட் வட்டாரத்தை அதிரவைதுள்ளது.
Blogger இயக்குவது.