யாரு..? சிம்பு-வா இதையெல்லாம் பண்றது..? - நம்பவே முடியலையே..! - வா தலைவா.. வா தலைவா..!


சிம்பு. இந்த ஒரு பெயர் போதுமே, வேறு ஏதும் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக இவர் நடிப்பில் சொல்லிக்கொள்ளும் படங்கள் வெளியாகவில்லை. வெளியான படங்களும் பெரிய ரீச் இல்லை. தொடர்ந்து சர்ச்சை, படம் ட்ராப் என சினிமாவில் இருந்தே விலகி இருக்கிறார் சிம்பு.

ஆனால்.... ஆனால்... ஆனால்... சினிமாவில் சிம்புவிற்கு என இருக்கும் இடம் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. சிம்புவின் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை என்பது தான் உண்மை. எல்லா பிரச்சனைகளையும் தூக்கி தூரப்போட்டு விட்டு வருஷத்துக்கு ரெண்டு படம் கொடுத்தால் சிம்பு வேற லெவலுக்கு செல்வார் என்பதும் உண்மை.

இது சிம்பு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால், அதற்க்கான அறிகுறியே இத்தனை நாட்களாக தெரியாமல் இருந்தது. இப்போது அதிர்ச்சியான, இன்ப அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அதற்க்கான அறிகுறிகள் தற்போது தெரிய தொடங்கியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ளாராம் சிம்பு. மாநாடு படத்திற்கு பிறகு அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Blogger இயக்குவது.