சிம்புவுடன் சேர்ந்து படம் பண்ணுவீங்களா..? - ரசிகரின் கேள்விக்கு "திரௌபதி" இயக்குனர் அதிரடி பதில்..!


காதல், ஆக்ஷன், ஹாரர் என பல்வேறு விதமான படங்கள் தமிழ் சினிமாவில் வந்தாலும் சமீப காலத்தில் ஜாதி பற்றிய படங்கள் அதிகம் வரத் துவங்கிவிட்டன. 

மேல்ஜாதியினர் செய்யும் வன்முறைகள் மற்றும் ஆணவ கொலைகள் பற்றி படங்கள் ஒருபுறம் வந்தால், தற்போது அதற்கு போட்டியாக தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கும் விதமாக நாடக காதல் பற்றி திரௌபதி படத்தின் ட்ரெய்லரே பெரிய சர்ச்சையை சந்தித்தது. 

அதையெல்லாம் கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்து நல்ல வசூலும் குவித்தது. இந்த வருடம் வெளியான படங்களில் தர்பார் படத்திற்கு அடுத்து இந்த படத்திற்கு தான் நல்ல வரவேற்பு என சில திரையரங்கங்களும் கூறின.

திரௌபதி படம் குறித்த விமர்சனங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிலளித்துவரும் மோகன் ஜி-யிடம் ரசிகர் ஒருவர் சிம்புவுடன் சேர்ந்து படம் பண்ணுவீங்களா..? என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த மோகன் ஜி, சிம்புவுக்கு ஓகே என்றால், எனக்கும் ஓகே. ரிச்சர்ட் ரிஷி சாரின் அடுத்த படத்தை முடித்த பின்பு சிம்புவை தொடர்பு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Powered by Blogger.