விஜய்யை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகருக்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி - வைரலாகும் புகைப்படம்..!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். அடுத்த மாதம் இந்த படம் வெளியாகவுள்ளது. 

இப்படத்தில் விஜய்க்கு முதன் முறையாக நடிகை மாளவிகா மோகனன் ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டு இருப்பதாக தகவல். 

இதில் முதலில் விஜய்யின் போர்ஷனை முடித்துவிட்டு, அதன்பின் விஜய் சேதுபதியின் டப்பிங்கை முடிக்கவுள்ளதாகவும் படக்குழு மூலமாக தெரிவந்துள்ளது. 

சமீபத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்து புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கில் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தற்போது விஜய்யை தொடர்ந்து இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகர் ஸ்ரீமனுக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுக்கும் புகைப்படம் டுவிட்டரில் வெளிவந்துள்ளது. 
Blogger இயக்குவது.