குட்டி குட்டியான உடையில் கவர்ச்சி நடனம் - வைரலாகும் கோமாளி பட நடிகையின் வீடியோ..!


தமிழில் ‘வாட்ச்மேன்’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை சம்யுக்தா ஹெக்டே நடித்து கடந்த ஆண்டு ரிலீஸான படம் ‘கோமாளி’. ‘ஜெயம்’ ரவி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். 

இந்த படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி பருவ காதலியாக நடித்திருந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது தான் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.தற்போது கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் நிலையில் அதை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதனால் இன்னும் தீவிரமாக பரவுவதை தடுக்கவே ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வெளியில் வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர். 

இதனால், வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிகுள்ளேயே முடங்கி கிடக்கும் நிலையில் சினிமாபிரபலங்கள் பலரும் வீட்டிற்குள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என இணையத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பகிர்ந்து வருகிறார்கள். 

அந்த வகையில், இவரும் வீட்டில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Blogger இயக்குவது.