ராகவா லாரன்ஸ் தம்பி மீது இளம் நடிகை பரபரப்பு புகார்..! - இவரா இப்படி செய்வது..? - ரசிகர்கள் ஷாக்..!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவரை போலவே, இவரது தம்பி எல்வினும் நடனமாடுவதில் தேர்ந்தவர். நடன பள்ளி நடத்தி வரும் இவர், காஞ்சனா - 2 படத்தில், லாரன்சுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை ஒருவர், எல்வின் மீது தெலுங்கானா காவல் துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, நான் தெலுங்கு படம் ஒன்றில் எல்வினுடன் நடித்தேன். அப்போதிலிருந்து, தன்னை காதலிக்கச் சொல்லி எல்வின் தொல்லை கொடுத்து வந்தார்.
ஆனால், நான் மறுத்து விட்டேன். அதனை தொடர்ந்து, என் மீது பொய்ப் புகார் கொடுத்து, காவல் துறையில் உள்ள சிலரது உதவியுடன், என்னை சிறைக்கு அனுப்பினார்.
ஒரு தவறும் செய்யாத நான் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளேன். இப்போது, என்னை கொலை செய்துவிடுவேன் என எல்வின் மிரட்டுகிறார்'' என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் தனக்கு உதவ வேண்டும் எனவும் கோரிகை வைத்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த கோலிவுட் ரசிகர்கள் ராகவா லாரன்ஸ்-ன் தம்பியா இப்படி செய்வது..? என ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.