"ஜாக்கிரதையாக இருங்க.." - இயக்குனர் நவீன் முகமது அலிக்கு இப்போது பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குனர்..!
திரௌபதி படத்தின் டீசர் வெளியான போது இது ஒரு குப்பை படம் என மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் முகமது அலி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், படம் வெளியாகி பட்ஜெட்டை விட பல மடங்கு வசூல் செய்து குடும்ப பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகின்றது.
இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டி கூட சமீபத்தில் நடைபெற்றது. அதே சமயம், இந்த படத்திற்கு எதிர்ப்பும் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் வருகின்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவது போன்ற காட்சிகள் உள்ளது என்பது அவர்களது கருத்தாக உள்ளது.
அப்படி சொல்பவர்கள் இதற்கு முன்பு வெளியான பல படங்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது வெறுப்பை உண்டாக்குவது போல இடம் பெற்ற காட்சிகளை கண்டிக்கவில்லை. இதனால், அவர்களுடைய எதிர்ப்பு இந்த படத்திற்கு ப்ளஸ் பாயிண்டாக மாறி தியேட்டர்கள் கூட்டம் அலைமோத காரணமாகி விட்டது.
இந்நிலையில், திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் திரௌபதி படத்தை குப்பை படம் என கூறிய முடர் கூடம் இயக்குனர் நவீன் முகமது அலி-க்கு இப்போது பதிலடி கொடுத்துள்ளார் .
அவர் கூறியுள்ளதாவது, " ஹாய் நவீன், எப்படிஇருக்கீங்க..? திரௌபதி படம் குறித்த உங்களுடையவிருப்பத்தை தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன். இப்போது உங்களுடைய தவறை உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறன். கிழிந்து போன பாரசூட்டில் பறக்காதீர்கள். விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு மேல் ஜாக்கிரதையாக இருங்கள். கவனித்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
Hi @NaveenFilmmaker brother.. How are you.. Waiting for your wishes for #Draupathi .. Hope you admit your mistake now.. Don't fly high with teared parachute.. Accident may happen.. Be careful hereafter bro.. Tc bro.. pic.twitter.com/wCuW12foOe— Mohan G 🔥😎 (@mohandreamer) March 3, 2020