என்னை விட்டு இப்படி ஒரே அடியா போயிட்டானே..! - மாஸ்டர் பட நடிகை உருக்கம்..!
பிரபல டிவி தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா சுப்ரமணியம் தற்போது நடிகர் விஜய்யின் "மாஸ்டர்" படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர் இன்று இன்ஸ்டாகிராமில் மிக உருக்கமான ஒரு பதிவை போட்டுள்ளார்.
அவர் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் இன்று காலை இறந்துவிட்டது. அதை நினைத்து தான் கண்ணீருடன் அந்த பதிவை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நாடே தற்போது கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது.
என் மைலோ (நாயின் பெயர்) உடல்நிலை சரியில்லாமல் கடந்த பல வாரங்களாக போராடியது. அதற்காக, பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. ஆனால் இன்று காலை உயிர் பிரிந்து விட்டது. அவனுக்கு உடல் நிலை சரியில்லாததை பார்த்து நான் கடும் மன அழுத்தத்தில் இருந்தேன். தற்போது எண்ணில் ஒரு பகுதியை இழந்ததாக உணர்கிறேன்.
நான் உயிருள்ளவரை உன்னை நினைத்துக்கொண்டிருப்பேன் என உருக்கமாக கூறியுள்ளார் ரம்யா.