பிகில் பாண்டியம்மாவா இது..? - ரோபோ ஷங்கரின் மகள் எப்படி மாறிவிட்டார் பாருங்க..! - ரசிகர்கள் ஷாக்..!


கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியான விஜயின் திரைப்படம் ‘பிகில்’. இதில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். வியாபார ரீதியாக இந்தப் படம் பெரிதும் பேசப்பட்டது. படம் வெளியாகி பெரும் வசூல் வேட்டை நடத்தியது.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் மற்றும் ராயப்பன் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ராயப்பன் பாத்திரம் அவரது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. 

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததால் பெண்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதில், பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்திருந்த இந்திரஜா சங்கர் அதிக கவனித்தை ஈர்த்திருந்தார். 

இந்நிலையில், இந்திரஜா சங்கர் தான் எடுத்து கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் முற்றிலும் அடையாளமே தெரியாத அளவுக்கு புதிய தோற்றதில் தென்படுகிறார். 


அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Blogger இயக்குவது.