புடவை, ஹை-ஹீல்ஸ் அணிந்துகொண்டு எப்படி இதை செய்கிறார்..? - வாவ்..! - ஜோதிகாவின் வீடியோ-வை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் நெட்டிசன்கள்..!


90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பின் ‘16 வயதினிலே’ படத்தில் ஆரம்பித்து தற்போது ‘காற்றின் மொழி’ படம் வரை நடித்துள்ளார். 

கிட்டத்தட்ட குறுகிய இடைவெளியில் ஐந்து படங்களில் நடித்து விட்டார். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை மட்டுமே தேர்வு செய்து ஜோதிகா நடித்து வருகிறார்.

கடந்த வருடம் மட்டும் ராட்சசி, ஜாக்பாட், தம்பி,பொன் மகள் வந்தால் என நான்கு படங்களில் நடித்தார். தற்போது எந்த படமும் இவரின் கை வசம் இல்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா புடவை சகிதமாக வந்திருந்தார். அப்போது, சிங்கப்பெண்ணே பாடல் ஒளிபரப்பு செய்யப்பட ஜோதிகா கையில் ஒரு கம்பு கொடுக்கப்பட்டது. புடவை, ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு கம்பு சுத்தும் அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இதனை பார்த்த ரசிகர்கள், புடவை கட்டிக்கொண்டும், ஹை-ஹீல்ஸ் போட்டுக்கொண்டு கம்பு சுத்துகிறார் .. வாவ்..! என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.