"திரௌபதி" பட காட்சி போலவே உண்மையில் நடந்த சம்பவம் - திரைப்பட நடிகர் கைது..! - பகீர் தகவல்கள்..!
சென்னை புது வண்ணார பேட்டையை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மகளிர் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு தோழிகள் மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அண்ணா நகரை சேர்ந்த விஜய் ஹரிஸ் என்பர் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் விஜய் அந்த மாணவியை காதலிப்பதாக கூறி அழைத்து வந்து சென்னை விருகம்பாக்கம் அறை ஒன்றில் ரூம் எடுத்துள்ளளார். அங்கு அந்த மாணவிக்கு குளிர்பானம் ஒன்றில் மயக்க மருத்து கலந்துகொடுத்து மாணவியை அவரின் சுயநினைவு இல்லாமல் அனுபவித்தது தெரியவந்துள்ளது.
மேலும், மயக்க நிலையில் இருந்த அந்த மாணவியை ஆடைகள் எதுவும் இன்றி விஜய் செல்போனில் படம் பிடித்து கூப்பிடும் போது வரவேண்டும் இல்லையெனில் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் அவர் மீது அந்த மாணவி சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல் ஆய்வாளர் சுகுனா என்பவர் விஜய் ஹரீஸை கைது செய்துள்ளனர். விஜய் தற்போது "நாங்களும் நல்லவங்க தான்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.