"மாநாடு" படத்தை தொடர்ந்து சிம்பு யார் இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா..? - இவரு தான் சிம்புவுக்கு கரெக்டான ஆளு..!


நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு" படத்தில் நடித்து வருகிறார் (ஆமாங்க.. நிஜமாவே நடித்து வருகிறார்). சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நன்றாக துவங்கியது. 

இப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ், எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். நடிகர் சிம்பு இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு எந்த படத்தில் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில். இதனை குறித்து தற்போது சிம்பு அடுத்ததாக முன்னணி இயக்குனர் மிஸ்கின் அவர்களின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.


**புடிச்சிட்டேன்.. மிஸ்கின் படம்னா இருட்டுல தான் இருக்கும். சிம்பு இரவு நேரத்தில் மட்டும் தான் ஷூட்டிங் வருவார். அப்போ கண்டிப்பா படம் கம்ப்ளீட் ஆகி ரிலீஸ் ஆகிடும். எந்த பிரச்சனையும் வராது.. சிம்புவுக்கு மிஸ்கின் தான் கரெக்ட்..!
Powered by Blogger.