"தனித்து இருப்பது என்றால் இதுவான்னு பாருங்க..!" - கோமாளி பட நடிகை வெளியிட்ட அதகளமான புகைப்படம்..!


தமிழில் ‘வாட்ச்மேன்’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை சம்யுக்தா ஹெக்டே நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான படம் ‘கோமாளி’. ‘ஜெயம்’ ரவி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். 

இதில் ‘ஜெயம்’ ரவி – சம்யுக்தா ஹெக்டேவுடன் சேர்ந்து காஜல் அகர்வால் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்த இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். 

இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து சம்யுக்தா ஹெக்டேவின் கால்ஷீட் டைரியில் இரண்டு படங்கள் இருக்கிறது.


சினிமாவில் ஒரு ரவுன்ட் வர துடிக்கும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். சமீபத்தில் உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படியும், சமூகத்தில் இருந்து சற்று விலகியே இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.


சமூகத்தில் இருந்து தனித்து இருப்பது என்றால் இதுவான்னு பாருங்க..! என்று கூறி கயிற்றில் தொங்கிய படி சில புகைப்படங்களை வெளியிட்டு அதகளப்படுத்தியுள்ளார் சம்யுக்தா.


Blogger இயக்குவது.