மிஷ்கின் அம்மாவை மோசமான வார்த்தைகளை திட்டிய நடிகர் விஷால் - மேடையில் கொந்தளித்த இயக்குனர் மிஷ்கின்


தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால், தனக்கெவும், தன் படங்களுக்கெனவும் தனி ரசிகர்கள் வட்டம் வைத்துள்ள இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த லிஸ்டில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின்.

அநேகமாக இவர் இயக்கம்படங்களில் முதல் நாள் காட்சிக்கு வந்தவர்கள் யாரென்று பார்த்தால் 80% கண்டிப்பாக அந்த பட ஹீரோவின் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள். எல்லோரும், மிஸ்கின் ரசிகர்களாக தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு தனக்கென ரசிகர் வட்டத்தை வைத்துள்ளார் மிஸ்கின்.

இவர் படத்தில் பாட்டு இல்லை, ரொமான்ஸ் இல்லை ஆ... ஊ.. என ஆயிரத்தெட்டு கலாய் கமெண்டுகள் வந்தாலும். மிஸ்கின் படமா..? வா போலாம் என்று கேட்கும் ரசிகர்கள் ஏராளம். இவர் நடிகர் விஷாலை வைத்து எடுத்து ஹிட் அடித்த படம் தான் "துப்பறிவாளன்". 

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டு இருக்கும் வேலையில், விஷாலுக்கும் இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இப்படத்தில் இருந்து மிஸ்கின் விலகினார். 

இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் தற்போது கலந்து கொண்ட கண்ணாமூச்சி என்ற வெப் சீரிஸின் நிகழ்ச்சியில் இந்த விவகாரத்தை குறித்து பேசிய போது , ஒரு நாள் இப்படத்தின் படப்பிடிப்புக்காக 13 லட்சம் செலவிட்டதாக கூறியது எல்லாம் பொய்யான ஒரு புகார். 

இதுவரை மொத்தமாக 7 லட்சம் தான் செலவு செய்துளேன். நடிகர் விஷாலை என் தம்பி என்று தான் நினைத்து பார்த்தேன். ஆனால், அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார், என் கூட பிறந்த தம்பியை கூட அடித்தார். என்னுடைய அம்மாவை மோசமாக பேசினார். என்று மேடையில் கொந்தளித்து பேசினார் இயக்குனர் மிஸ்கின். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Powered by Blogger.