"எத்தனை வருஷம் தவம் இருந்தோம் இந்த போட்டோவை பார்க்க.." - சிம்ரன், ஜோதிகாவின் புகைப்படத்தால் உருகும் ரசிகர்கள்.!


90 களில் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னி என்றால் அது சிம்ரன் தான். மேலும், குண்டாக இருக்கும் ஹீரோயின்களை இந்த கால சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காது என்ற எழுதப்பாடாத ஒரு விதியை உடைத்து பொசுபொசுவென இருந்த ஜோதிகா உடைத்தார்.

சிம்ரன், ஜோதிகா ஆகிய இருவருமே பிரதான முன்னணி ஹீரோக்கள் படங்களில் ஹீரோயின்களாக வளம் வந்தார்கள். இவர்களுக்கென இப்போது தனி ரசிகர் வட்டம் உள்ளது. இப்போது இருவரும் குடும்பம், குழந்தை குட்டி என்று செட்டிலாகி விட்டாலும் இப்போது குழந்தைகள் பெரியவர்கள் ஆகி விட்டதால் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.


இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட சிம்ரன் , ஜோதிகா இருவரும் புடவை சகிதமாக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றனர்.


சக நடிகைகள் கவர்ச்சி உடையில் வந்திருந்த போது புடவை சகிதமாக தோன்றி மாஸ் காட்டியுள்ளார்கள் சிம்ரனும், ஜோதிகாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எத்தனை வருஷம் தவம் இருந்தோம் உங்களை இப்படி பார்க்க என்று உருகி வருகிறார்கள்.


Blogger இயக்குவது.