சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்கள் - அதிரடி லிஸ்ட் இதோ..!


நடிகர் சிம்பு சமீப காலமாக சரியான படங்கள் எதுவும் கொடுக்க வில்லை. மேலும்,படங்கள் தொடர்பாக சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி தன்னுடைய இமேஜை டேமேஜ் செய்து கொண்டார்.

ஆனால், இன்னமும் அவருக்கான மார்க்கெட் என்பது அப்படியே தான் இருக்கிறது என்பது தான் ஆச்சரியமே. சிம்பு தனக்கென்று ஒரு நல்ல ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இந்நிலையில், தற்போது தன் குறைகளை சரி செய்துக்கொண்டு மாநாடு படப்பிடிப்பில் தொடர்ந்து வேலைப்பார்த்து வருகின்றார். 

சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து அனைத்துக்காட்சிகளையும் நடித்துக்கொடுத்து வருவதாக இப்படத்தின் தயாரிப்பாளரே கூறியிருந்தார். தற்போது சிம்பு அடுத்தடுத்து பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றாராம். 

இதில் முக்கியமாக இயக்குனர் சேரன் ஒரு கதையை சிம்புவிடன் சொன்னாராம். அதை தொடர்ந்து மிஷ்கின், சுதா கொங்கரா என தரமான படங்களை கொடுத்த இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறாராம். 

கூடிய விரைவில் கண்டிப்பாக சிம்பு நிறைய படங்களில் நடித்து ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கம்பேக் கொடுப்பார் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக உள்ளது.
Powered by Blogger.