அஜித்தை கிண்டல் செய்த நெட்டிசனுக்கு நடிகர் விவேக் கொடுத்த பதிலடி..!
நடிகர் அஜித்திற்கு சினிமாவில் மற்றும் பொதுவெளியில் இருக்கும் ரசிகர் வட்டம் குறித்து சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால், யார் எதை செய்தாலும் அவர்களை ட்ரோல் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது.
பாரதத்தின் பிரதமர் மோடி-யையே ட்ரோல் செய்கிறார்கள். செய்துவிட்டு கருத்து சுதந்திரம் என்கிறார்கள். இதையெல்லாம் கடந்து வந்து கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால், சினிமா நடிகர்களை ட்ரோல் செய்வதையே முழு நேர தொழிலாக கொண்டுள்ளனர் சில வலை வாசிகள். அந்த வகையில், விவேக்கின் ஹிட் வசனங்கள் சிலவற்றை எடுத்து கலந்து மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் அனிருத் நடனதுடன் கோர்த்து விட்டு ஒரு வீடியோ ஒன்றை நெட்டிசன் ஒருவர் உருவாகியுள்ளார்.
இதனை பார்த்த விவேக், அதனை நன்றாக உள்ளது என பாராட்டி தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு ரசிகர், டி.ராஜேந்தரின் பாடலுக்கு அஜித் நடனமாடுவது போல எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்து அப்போ இது என்ன என்று கேட்டுள்ளார்.அதற்கு, விவேக் என்ன பதில் கொடுத்தால் என்று பாருங்கள்.
வாழ்க்கையே ரிதம் தான்;— Vivekh actor (@Actor_Vivek) March 13, 2020
அதை ரசிப்பது நிதம் தான்; அதிலும் இவரைப் பார்ப்பது ஒரு சுகம் தான்!! https://t.co/0PyLAIrRcV