தலைவன்-னா யாரு..? - நடிகர் ரஜினிகாந்த் ஒரே போடு..! - பற்றி எரியும் தமிழக அரசியல் களம்..!


இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்த நடிகர் ரஜினிகாந்த், செயலாளர்களை சந்திக்க நேரில் செல்லாமல் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வருட எதிர்பார்ப்பிற்கு பிறகு இன்று ரஜினிகாந்த் அவரின் அரசியல் திட்டம் , வருகை குறித்து பேச வாய்ப்புள்ளது என்கிறார்கள். 

இன்று நடிகர் மீண்டும் ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்தார். காலை 8 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியவிஷயங்கள் ரத்தின சுருக்கமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1) நான் முதலமைச்சர் ஆவதில் எனக்கு விரும்பமில்லை. அதற்க்கான, ஆசையும் எனக்கு இல்லை. அதனால், நான் முதலமைச்சர் வேட்பாளர் கிடையாது.

2) கட்சிக்கு அதே தலைவர், ஆட்சிக்கும் அதே தலைவர் என்றால் அவரை எதிர்த்து யாரும் எதுவும் பேச முடியாது. உதரணமாக, கட்சி தலைவரே முதலமைச்சராக இருக்கும் பட்சத்தில் கட்சியில் இருந்து யாரும் முதலமைச்சரை கேள்வி கேட்க முடியாது. இதனால், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. இதனால், ஆட்சியில் உள்ளவர் கட்சி தலைமையின் மீது பயத்துடன் இருப்பார். தவறான விஷயங்களை செய்ய மாட்டார். அப்படி செய்தால், அடுத்த நொடியே அவருடைய முதலமைச்சர் பதவியை கட்சி பிடுங்கி விடும். இந்த முறையை நான் கொண்டுவருவேன்.

3) ஒரு திட்டம் அரசிடம் இருந்து மக்களுக்கு சென்று சேர்வதற்கு மாவட்டம், வட்டம், கிராமம், கிளை என பல அரசு அலுவலர்கள் இடையில் வருகிறார்கள். இதனால் மக்களுக்கு செல்ல வேண்டிய உதவி, பணம் இடையில் இவர்களால் சுரண்டப்படுகிறது. இந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டும். இதை மாற்றாமல் ஆட்சி செய்தால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதே பாத்திரத்தில் சக்கரை பொங்கல் வைத்தது போல தான் இருக்கும் இதனால், அரசுக்கும், மக்களுக்கும் இடையே இருக்கும் இந்த அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பேன். இதனால், அரசு திட்டங்கள், உதவிகள் மக்களை நேரடியாக சென்றடையும்.

4) மேலும், 50 வயதிற்கு உட்பட்ட நபர்களுக்கு மட்டுமே MLA சீட் கொடுப்பேன். 

5) எனக்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லை என்று 2017-ம் ஆண்டே நான் கூறி விட்டேன். மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் இளைஞர்களுக்கு தான் அந்த பதவி கிடைக்க வேண்டும். அதற்க்கான தூண்டு கோலாக மட்டுமே நான் இருப்பேன். என்னுடைய ரஜினி மக்கள் மன்றம் இருக்கும். நானே கட்சி தலைவர், நானே முதல்வர் என்றால் நான் தவறு செய்தால் யார் என்னை தட்டி கேட்க முடியும். அதனால், எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்.

இந்த விஷயங்கள் மக்கள்மத்தியில் சென்று அவர்களிடையேஎழுச்சி வரவேண்டும். நான் எதிர்க்கப்போவது இரண்டு பெரிய ஜாம்பவான்களை. பத்து வருடம் ஆட்சியில் இல்லாத திமுகவின் தலைவர் ஸ்டாலின் தன்னை கருணாநிதியின் மகன் என நிரூபித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம். பண பலம், ஆள் பலம், கட்டமைப்பு என அனைத்தும் அவரிடம் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். 

மறு பக்கம் பத்தாண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் அதிமுக. இவர்களளும் திமுகவிற்கு சரி நிகரான பலத்தை கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு இடையில் நான் ஒரு துரும்பு. என்னுடைய ரசிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி ஆரம்பித்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

மக்கள் மத்தியில் மாற்றதிற்கான அலை உருவாக வேண்டும். எழுச்சி ஏற்பட வேண்டும். அப்போது, இந்த பண பலம், ஆள் பலம், கட்டமைப்பு என அனைத்து தவிடு பொடியாகிவிடும். இந்த எழுச்சி மக்கள் மத்தியில் வரும் போது நான் என்னுடைய அடுத்த கட்ட நகர்வை கூறுகிறேன். இது தான் என்னுடைய முடிவு. தலைவன்-னா யாரு..? தலைவன் சொல்வதை கேட்பவர்கள் தான் தொண்டர்கள். ஆனால், தொண்டர்கள் சொல்லும் அனைத்தையும் கேட்பவன் தலைவன் கிடையாது. இவ்வாறாக அனல் பறக்க பேசியுள்ளார் ரஜினிகாந்த்.
Blogger இயக்குவது.