புது பட பூஜை விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்திருந்த பிக்பாஸ் நடிகை லாஸ்லியா..! - வைரல் புகைப்படங்கள்..!
விஜய் டிவியில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் லாஸ்லியா.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இந்நிகழ்ச்சி அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் கவின் - லாஸ்லியாவின் காதல் ரசிகர்களிடையே பேசுபொருளானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியாவுக்கு திரைத்துறையில் நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறினார். இதையடுத்து லாஸ்லியா எப்போது சினிமாவில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தை பூஜையில் கலந்து கொள்ள வந்த அவர் கண்ணை கவரும் கவர்ச்சிஉடையில் வந்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.