“சார் எனக்கு படத்தின் கதை பிடிக்கவில்லை” என கூறிவிட்டு - இயக்குனருக்காக நடித்து கொடுத்த அஜித்.! - என்ன படம் தெரியுமா..?


நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது. 

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து, இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை படத்தில் அஜித் நடித்து வருகின்றார். 

அஜித்தை வைத்து கடந்த 2005-ம் ஆண்டு வெளியான "ஜி" படத்தை இயக்கியிருந்தார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்த இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. 

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜி படம் குறித்து மனம் திறந்துள்ளார். இதில் ‘அஜித் சாருக்கு நான் ஜி படத்தின் கதையை கடைசி நாள் அதாவது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் சொன்னேன். 

அவர் “சார் எனக்கு படத்தின் கதை பிடிக்கவில்லை. நம்பிக்கையும் இல்லை” என்றார். உடனே நான் தயாரிப்பாளரிடம் பேசினேன். ஆனால், அவர் எல்லாம் தயாராகிவிட்டது, நீங்கள் படத்தை தொடங்குகள் என்றார். 

இதை அஜித் சாரிடம் சொன்ன போது, உங்களுக்கு கதை மேல நம்பிக்கை இருக்கா? என்றார். நானும் ஒரு மனதாக “இருக்கு சார்” என்றேன். அப்படி தொடங்கியது தான் 'ஜி' என லிங்குசாமி கூறியுள்ளார்.
Powered by Blogger.