ப்ளாக் அண்ட் ப்ளூ.. வாட் எ காம்பினேஷன்.." - ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..! - வைரலாகும் புகைப்படம்..!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், இளசுகளின் கனவுக்கன்னியாகவும் இருந்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது தமிழ் சினிமாவின் பரிதாபத்துகுரிய நடிகைகள் பட்டியலில் சேர்ந்து விட்டார்.
ஒற்றை ஊதா கலர் ரிப்பனில் தமிழ் சினிமா ரசிகர்களையே கட்டிப்போட்டவர் கையில் இப்போது படமே இல்லை. அதர்வாவுடன் நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த படம் மட்டுமே இருக்கிறது.
அதுவும் எப்போது அடுத்த ஷெட்யூல், படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா..? ஷூட்டிங் நடக்கிறதா..? இல்லையா..? என்று எந்த அப்டேட்டும் தெரியாமல் நிற்கிறது.
எனவே என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார். கிளாமர் ரூட்டுக்கு போகாதது தான் பெரிய ஹீரோக்கள் பார்வை படாததற்கு காரணம் என்று கண்டுபிடித்ததோடு அந்த பக்கமும் போகலாமா என்று யோசிக்கிறாராம்.
இன்னொரு பக்கம் கிளாமர் காட்டுவதற்கு உங்க உடல்வாகு செட் ஆகாது என்று அட்வைஸ்களும் வருகின்றனவாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோதுதன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது நீல நிற ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிற டி-சர்ட்அணிந்து கொண்டு, "ப்ளாக் அண்ட் ப்ளூ.. வாட் எ காம்பினேஷன்.." என்று கூறி பதிவு செய்துள்ளார்.