"தம்பி விஷாலு... உனக்கு இருக்குது ஆப்பு.." - கடும் கோபத்தில் இயக்குனர் மிஷ்கின்..!
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.
முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில்முடிந்தது.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் முன்பு எழுந்த பிரச்சனையில் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதனால், நடிகர் விஷாலே இந்த படத்தை தற்போது இயக்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.
அதில், மிஸ்கின் பெயர் இடம் பெறவில்லை. மாறாக, விஷால் மற்றும் இளையராஜா பெயர்கள் கொட்டை எழுத்தில் இருந்தன. மேலும், தன்னுடைய தரப்பில் இருந்து ஒரு விளக்க அறிக்கையை கொடுத்தார் விஷால்.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசியஇயக்குனர் மிஷ்கின் தம்பி விஷால் உனக்கு இருக்கு ஆப்பு என்று கூறி விட்டு கோபமாக கிளம்பி சென்றுவிட்டார். இந்த விவகாரம் ஏதோ வழக்கமாக படங்களில் ஏற்படும் பிரச்சனைதான் என்று பார்த்தால் இந்த பிரச்சனை அதற்கு மேல் இருக்கும் போல தெரிகின்றது.
விஷால் - மிஷ்கினின் இந்த மோதல் எங்கு போய் முடிய போகின்றது என்று தெரியவில்லை.