உற்சாகத்தில் கவின் ஆர்மி - அடுத்தடுத்த அப்டேட் - மிரட்டலாக வெளியான "லிப்ட்" ஃபர்ஸ்ட்லுக் இதோ..!
‘சரவணன் மீனாட்சி’ என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான கவின், ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படம் நீண்ட காலத்தாமதத்தில் வெளியானாதால் சரியான வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார். அதிலும் லாஸ்லியாவுடனான காதல் பெரிதும் சர்ச்சைக்கும், பரபரப்பையும் உண்டாக்கியது.
இந்நிலையில் அது முடிந்த பிறகு படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த கவின், தற்போது ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக பிகில் திரைப்படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார். ‘லிப்ட்’ என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் பார்வை வரும் மார்ச் 13 -ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்தது.
அதன் படிசற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவின் ஆர்மியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.