மாநாடு படத்தில் இருந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் மாஸான கெட்டப் - இணையத்தில் வெளியான புகைப்படம்..!


நடிகர் சிம்பு அடுத்து மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார். இதை வெங்கட் பிரபு இயக்குகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. 

மாநாடு படத்தின் பூஜை மற்றும் படப்படிப்பு தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றது. படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தயாரிப்பு தரப்பில் இருந்தும் சிம்புவின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அடுத்து, சிம்பு மீண்டும் நடிப்பார் என்று கூறப்பட்டது. நடிகர் சிம்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டதால் அவர் மலைக்கு சென்று திரும்பிய பிறகு படத்தின் வேலைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு எந்த தடையும் இன்றி பரபரப்பாக நடந்து வருகின்றது.  இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் கெட்டப் ஒரு புகைப்படம் மூலம் வெளியாகியுள்ளது. இதனை, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்...
Powered by Blogger.