"அதனால் தான் இவ்வளவு வன்மம்.." - அடுத்த படம் பற்றி "திரௌபதி" இயக்குனர் வெறித்தனமான பதிவு..!
தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக இயக்குனரானவர் மோகன் ஜி. இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதற்கு சமமான எதிர்ப்பையும் பெற்று வரும் திரைப்படம் திரௌபதி.
தற்போது விகடன் பத்திரிகை இப்படத்தை விமர்சனம் செய்து அதற்கு 100-க்கு 29 மார்க் கொடுத்துள்ளது. மேலும் தன் தரப்பு நியாயத்தை சினிமாவழி பேசுவதில் தவறில்லை. அதற்காக எதிர்த்தரப்பை மிகவும் தரம் தாழ்த்திச் சித்திரித்து, முழு எதிரிகளாக முன்னிறுத்துவது அறமில்லையே. திரௌபதி அறம் பேசவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு மோகன் ஜி தன்னுடைய ட்வீட் மூலமாக பதில் கொடுத்துள்ளார். அதில் இது என் படத்திற்கான மார்க் இல்லை.. என் சமூகத்தில் இருந்து நான் வெற்றியாளராக வெளிவந்ததை தாங்க முடியாத வலி.. இது ஆரம்பம் தான்.. பல வன்னிய படைப்பாளிகள் இனி வெல்ல தான் போகிறார்கள்.. இப்படியே குப்புற படுத்து புலம்ப வேண்டியது தான் நீங்க.. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கலாட்டா என்ற பிரபல இணைய ஊடகம் இயக்குனர் மோகன் ஜி-யிடம் பேட்டி எடுத்த போது பதில் சொல்ல முடியாமல் எழுந்து சென்று விட்டார் என திரித்து வீடியோவை வெளியிட்டது.
ஆனால், நான் அப்படி செல்லவில்லை. முறையாக பேட்டியை முடித்து விட்டு தான் எழுந்து வந்தேன் என்று இயக்குனர் மோகன் ஜி கூறியது மட்டுமல்லாமல் கலாட்டா அலுவலகத்திற்கே நேரில் சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், என்னுடைய படத்திற்கு "திரௌபதி" என்ற கடவுள் பெயரை வைத்ததால் தான் இவர்களுக்கு இவ்வளவு வன்மம். என்னுடைய அடுத்த படத்திற்கும் கடவுள் பெயர் தான் தலைப்பு. விரைவில் அறிவிப்பு வரும். காத்திருங்கள் என காட்டமாக கூறியுள்ளார்.
#திரெளபதி ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்..— Mohan G 🔥😎 (@mohandreamer) March 8, 2020