"பொள்ளாச்சி சம்பவம் அப்ப எங்க போன..?" - கேள்வி கேட்ட ரசிகருக்கு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி சுளீர் பதில்..!
இதில், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியாகி செம வைரலானது. படம் வெளியான நாள் முதல் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
இந்த படம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. ஆதரவை விட இந்த படத்திற்கு வந்த எதிர்ப்பு தான் படத்தின் ப்ரோமொஷனை பைசா செலவில்லாமல் செய்து கொடுத்தது என்று சொல்லலாம்.
இந்த படத்தை பார்த்த ஒரு தரப்பினர் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்வி, நாடக காதல் பற்றி படம் எடுக்குறேன் என கூறுகிறீர்களே..? பொள்ளாச்சி சம்பவம் நடந்த போது எங்க போனீங்க..? என்பது தான்.
இந்நிலையில், இதே கேள்வியை ரசிகர் ஒருவர் இயக்குனர் மோகன் ஜி-யை மென்ஷன் செய்து ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார். இதற்கு மோகன் ஜி கொடுத்துள்ள அதிரடி பதில் தான் வேற ரகம்.
அந்த கேள்வி எழுப்பிய ரசிகருக்கு, " அப்போது நான் உலக சுற்றுலா சென்றிருந்தேன். இப்போ என்னாங்குற.. அதுக்கு ஆதாரமா என்னோட பாஸ்போர்ட் காப்பி வேணுமா போராளி.." என்று கூறியுள்ளார்.
World tour போனேன்..இப்ப இன்னாங்குற... Proofக்கு Passport copy வேணுமா போராளி.. https://t.co/bmaZH5WT5z— Mohan G 🔥😎 (@mohandreamer) March 2, 2020