"இந்த ரணகளத்துலேயும் உங்களுக்கு குதூகலமா..?" - நயன்தாரா விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்..!
கடந்த 22-ம் தேதி மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திய மக்கள் அனைவரும் கைத்தட்டிய போது கூட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரொமான்ஸ் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை உலகம் முழுக்க 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை, உலக பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகிக்கும் நாடாக இருக்கும் நிலையில் 21 நாள் ஊரடங்கு என்ற முடிவை மோடி எடுத்திருப்பது குறித்து பல நாட்டு தலைவர்களும், ஐ,நா சபை தலைவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், அடுத்தடுத்த நாட்களை எப்படி நகர்த்தப்போகிறோம் என்ற கவலையே இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ளும் என நம்பிக்கையுடன் மக்கள் அமைதியாக இந்த ஊரடங்களில் முழுமையாக பங்கேற்று வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்திய
மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளை விட்டு வெளியே
வரவேண்டாம் என்றும் மாலை 5 மணிக்கு வீட்டு வாசலில் நின்றப்படி கைகளை
தட்டியும் மணியோசை எழுப்பியும் கொரோனாவுக்கு எதிராக போராடும்
மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியதை தொடர்ந்து இந்திய மக்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு கை தட்டி நன்றி தெரிவித்தனர்.
அந்த நேரத்தில், நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆளுக்கொரு கையாக இரு கைகளை தட்டி நன்றி தெரிவித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த ரணகளத்துலேயும் உங்களுக்கு குதூகலமா என கேட்டுள்ளனர்.