ரஞ்சித் சொன்னது கடைசியில் திரௌபதி-க்கு நடந்துருச்சே..! - ரசிகர்கள் கருத்து..!
'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை தொடர்ந்து, இயக்குனர் மோகன் நடிகர் ரிஷி ரிச்சர்டை வைத்து இயக்கிய இருந்த திரைப்படம் 'திரௌபதி' .
இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது பல்வேறு திரையரங்கங்களில் மிகவும் விமர்சையாக வெளியானது.
திரைப்படம் வெளியான நாளில் இருந்து, தற்போது வரை இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளியான மூன்று நாட்களில் 6 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
சமீபத்தில், ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித், இங்கு படம் எடுப்பதை விட அதனை வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை
எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றி அடைய வேண்டும். இங்கு யாரும் யாரையும்
நம்பிப் பிறக்கவில்லை.
அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான
அடையாளத்தைத் தரும். தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே
இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள் என்று கூறினார்.
ரஞ்சித் கூறிய இந்த விஷயம் இப்போது திரௌபதி படத்திற்கே நடந்து விட்டது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.