"முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்..." - நடிகை வரலக்ஷ்மி சற்று முன் வெளியிட்ட வீடியோ..!
இந்தியாவில் 500 பேருக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மேலும் பரவாமல் தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதால் மக்கள் முழுமையாக வெளியில் வராமல் முடக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய அறிவுரைகளை வீடியோ மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகை வரலக்ஷ்மி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, "வணக்கம் நீங்கள் வீட்டில் இருப்பீர்கள் என நம்புகிறேன். நானும் வீட்டில் தான் இருக்கிறேன். சில விஷயங்கள் சொல்கிறேன். ஏற்றுக்கொள்வதென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். கொரோனாவாவது டேஷ் ஆவது என ஒரு குரூப் சுற்றி கொண்டிருக்கிறது. அவர்களிடம் தான் பேசுகிறேன்.
கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அறிக்கை படி 27 சதவீதம் மக்கள் தான் வீட்டில் இருந்திருக்கிறார்கள், மற்றவர்கள் வெளியில் தான் சுற்றி கொண்டிருந்திருக்கின்றனர். என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சற்று முன்புமற்றொரு வீடியோவை வெளியிட்டு நேற்று முக்கியமான ஒரு விஷயத்தை கூற மறந்து விட்டேன், உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை தனியாக விட்டு விடாதீர்கள். அவற்றிற்கும் உணவு மற்றும் தண்ணீர் வையுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வீடியோ இதோ,