மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு பிடித்த TOP 5 திரைப்படங்கள்..! - அவரே கூறியது..!


தமிழில் "மாநகரம்" எனும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு ஒரு இளம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தியுடன் இணைந்து "கைதி" எனும் படத்தை பிகில் படத்திற்கு போட்டியாக களம் இறக்கினார். இப்படம் நடிகர் கார்த்திக்கின் திரையுலக பயணத்திற்கு மிக முக்கியமான ஒரு படமாகவும், அவருக்கு நீண்ட நாள் கழித்து ஒரு ப்ளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது.

இப்படம் வசூல் ரீதியாக மட்டும் ரூபாய் 100 கோடி வசூலித்து நடிகர் கார்த்திக்கு மிக பெரிய பெயரை ரசிகர்கள் மத்தியில் வாங்கி தந்தது. இதற்கு பிறகு தான் தமிழ் சினிமாவின் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்க துவங்கினார் லோகேஷ். 

இப்படம் தற்போது ரீலிஸுக்கு தயாராகி விட்டது ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில கசப்பான சூழ்நிலை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போகவும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தனக்கு மிகவும் பிடித்த ஐந்து படங்கள் என்னென்ன என்று கூறியுள்ளார் லோகேஷ்.அவை பின் வருமாறு,

1.சத்யா
2.விருமாண்டி
3.குட் ஃபெல்லாஸ் (Good Fellas)
4.தி டிப்பார்டட் (The Departed)
5. ஜாங்கோ அன்செயின்ட்டு (Django Unchained)
Powered by Blogger.