13 வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட குஷ்பு..! - வைரலாகும் புகைப்படம்..!


80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழகத்தில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் குஷ்புவை தவிர வேறு யாருக்கும் இருந்தது இல்லை. 

ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், சரத்குமார், பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்கள் தங்களது படத்தில் நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்வது குஷ்புவை தான். 

மகாராஷ்டிராவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த குஷ்பூ முதன்முதலாக கலியுக பண்டவலு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர்த்து மலையாளம் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு, 2 பெண் பிள்ளைகளுக்கு தாயாக மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வருகிறார். 

தற்போது, கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகை குஷ்புவும் தன்னுடைய 13 வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


Blogger இயக்குவது.