தஞ்சை பெரிய கோயில் குறித்து ஜோதிகாவின் கிண்டல் பேச்சு - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.! - வெடிக்கும் சர்ச்சை..!


15 வருடங்களுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக கலக்கி வந்தவர் நடிகை ஜோதிகா. தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். 

குடும்பம், குழந்தை என செட்டிலாகிய அவர் குழந்தைகளை பெரிதான பின்பு மீண்டும் நடிக்க வந்து விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் ஹீரோயின் சென்றிக் படங்களில் நடித்து வருகிறார். 

ரீ-எண்ட்ரியான பிறகு கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து விட்டார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற JFW விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா புடவை அணிந்து வந்திருந்தார். 


ஆனால், அவர் பேசிய பேச்சு பலதரப்பினரையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேடையில் பேசுகையில், “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்” என்று பேசியுள்ளார். 


இதை கண்ட நெட்டிசன்கள், ஜோதிகாவை சரமாரியாக விளாசி வருகின்றனர். லட்சகணக்கில் செலவு செய்து உண்மையான முகத்தை மறைக்க மேக்-கப் போடும் உங்களுக்கு தஞ்சைபெரிய கோயிலை பற்றி பேச என்ன தகுதி இருக்கின்றது.


தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்ட காலத்தில், குழந்தைகள் கல்வி பயிலும் பாடசாலையாகவும், உணவு சேர்த்து வைக்கும் தானியக்கிடங்காகவும், மன்னர்கள் கூடி சட்டம் வகுக்கும் சட்ட சபையாக பயன் படுத்தப்பட்டது. இப்படி தமிழனின் உணர்வில் இரண்டற கலந்து கிடக்க வேண்டும் தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்பதில் ஆரம்பித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.


நடிகை ஜோதிகாவின் பேச்சு கடுமையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் தான் குடமுழுக்கு நடத்தவேண்டும் என்று கோஷம் போட்ட வாய்கள் எங்கே போயின..? என்று பலரும் கண்டனக்குரல்களை எழுப்பி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.