ஜோதிகா சர்ச்சை பேச்சு - வைரலான ட்வீட் - பதறியடித்துக்கொண்டு விளக்கம் கொடுத்த விஜய் சேதுபதி..!


விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, “பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது, அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. 

உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. 

நான் கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று கூறினார்.இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஜோதிகா அவர்கள் மருத்துவமனைக்கு சென்றது படம் எடுப்பதற்காக, அப்படியென்றால் மருத்துவமனையின் நிலைமையை பார்த்த பிறகு நான் இனிமே படம் எடுக்கவில்லை என்று படத்திற்க்கான செலவை அந்த மருத்துவமனையை பராமரிக்க கொடுத்திருக்கலாமே..? அதுவும் இல்லையா, சினிமா என்ற ஒரு பொழுதுபோக்கு விஷயதிற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறீர்கள் அதே காசை பள்ளி, மருத்துவமனை கட்டவும் கொடுங்கள் என கூறியிருந்தால் பிரச்சனையே இல்லை.

படம் எடுக்க மருத்துவமனைக்கு சென்றது மட்டுமில்லாமல், அது பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் நான் கோயிலுக்கு செல்லவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ஜோதிகாவுக்கு ஆதரவான ஒரு ட்வீட்டை பதிவு செய்தது போல ஒரு புகைப்படம் தீயாக பரவ ஆரம்பித்தது. ஜோதிகாவின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை புரிந்து கொண்ட விஜய் சேதுபதி நான் அப்படி கூறவே இல்லை. இது போலியானது என உடனடியாக விளக்கம் கொடுத்துள்ளார்.


Blogger இயக்குவது.