பிக்பாஸ் நடிகையின் தலையணை வொர்க்-அவுட் - வைராலாகும் தாறு மாறு வீடியோ..!
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக தோன்றி வந்த நடிகை ஷாக்ஷி அகர்வால் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களின் ஒருவராகவும் ஷாக்ஷி அகர்வால் இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாக்ஷி, நடிகை மீரா மிதுன், யாஷிகா ஆனந்த் போன்றோர் ஏட்டிக்கு போட்டியாக போட்ஷூட் நடாத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.
பட வாய்ப்புகளை பெற இப்படியான கவர்ச்சி ஸ்டன்ட்டுகளை அடித்து வருகிறார்கள் பிக்பாஸ் நடிகைகள். ஆனால், பட வாய்ப்பு வந்த பாடில்லை. ஆனாலும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் லாக் டவுன் காரணமாக வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
தினமும் விதவிதமான உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தலையணையை வைத்து உடற்பயிற்சி செய்வது எப்படி என்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.