தோணி குறித்த சர்ச்சை பதிவுக்கு லைக் போட்ட மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - நெட்டிசன்கள் சுடச்சுட பதிலடி..!


மாநகரம் திரைப்படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். 

படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்கள் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, "என் பெயரில் இயங்கும் பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் பக்கங்கள் போலியானது. நான் ட்விட்டரில் மட்டுமே அக்கவுண்ட் வைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும், கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்க்க ஒட்டு மொத்த இந்தியர்களும் தங்களுடைய ஒற்றுமையை காட்டும் விதமாகவும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் வழக்கமாக எரியும் மின் விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்கு, டார்ச் லைட், செல் போன் லைட் போன்றவற்றை பிரகாசிக்க செய்யும் படி பாரத பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வழக்கம் போல பிரதமர் எதை செய்தாலும் கேலி, கிண்டல் பேசும் சிலர் இதனை கிண்டலடித்து கொண்டிருந்தனர். நாங்கள் அப்படி செய்ய மாட்டோம். டார்ச் லைட் அடித்தால் கொரோனா போய்விடுமா..? என்று கிண்டல் மீம்களை பறக்க விட்டு வந்தனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் விளக்கு பிடித்தால் எப்படி கொரோனா போகும்..? என்று விமர்சனம் செய்தனர். 

எதற்க்காக, மோடி விளக்கு ஏற்ற சொன்னாரோ.? அந்த நோக்கத்தை மறைக்க பல வேலைகளை செய்தார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி அன்று இரவு ஒரு குட்டி தீபாவளி போல மக்கள் கொண்டாடினார்கள். களைப்பில் இருப்பவன் கையில் ஒரு டம்ளர் மோர் கொடுத்தால் எப்படி சந்தோஷப்படுவானோ அப்படி ஒரு சந்தோசத்தை மக்கள் மத்தியில் பார்க்க முடிந்தது.

பொது மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பலர் இந்த தீபத்தை ஏற்றும் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோணி இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவர் வேண்டுமென்றே அப்படி செய்தாரா..? அல்லது தெரியாமல் விட்டுவிட்டாரா..? என்று தெரியவில்லை. ஆனால், அந்த மோடி எதிர்ப்பு குருப்பை சேர்ந்த சிலர் இதனால் அகம் மகிழ்ந்தனர். 

தோனியின் புகைப்படத்தை பதிவு செய்து "தடுமாறிடாதே தலைவா" என ஒரு டிவீட்டை பதிவு செய்ய, மாஸ்டர் படத்தின் இயக்குனர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டு விட்டார்


இதனால், இந்த விஷயம் மீடியாவின் கவனத்திற்கு வந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோணியே பாரத பிரதமரின் இந்த விளக்கு ஏற்றும் விஷயத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று உச்சி குளிர்ந்தனர்.

ஆனால், அவர்களின் அந்த சந்தோசம் ரொம்ப நேரம் நிலைக்கவில்லை. ஆம், சற்று நேரத்தில் தோணியின் மனைவி சாக்ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் அனைத்து இந்திய மக்களை போல 9 மணிக்கு 9 நிமிடங்கள் 9 விளக்குகள் ஏற்றி வைத்தோம் என ஒரு கவிதையை பதிவு செய்தார்.

இதனை பார்த்த சக நெட்டிசன்கள் அந்த பதிவிற்கு தோனியின் மனைவி பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பதிவை SS எடுத்து சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளனர்.
Blogger இயக்குவது.