தனியறையில் விக்ரம், ஜோதிகா..? சண்டை போட்ட சூர்யா..? - இணையத்தில் தீயாய் பரவும் தகவல் - உண்மை என்ன..?


நடிகை ஜோதிகா சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலை எடுத்துக்காட்டாக கூறி கோயிலுக்கு கொடுக்கும் அதே பணத்தை ஸ்கூல், ஹாஸ்பிடல் கட்டுவதற்கு கொடுங்கள் என பேசினார்.

இந்த பேச்சு பலருடைய எதிர்ப்பை சம்பாதித்தது, பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. ஜோதிகா பேசியது நல்ல விஷயம் தான். ஆனால், தஞ்சை பெரிய கோயிலை சுட்டிக்காட்டி பேசியிருக்க கூடாது என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இன்னொரு தரப்பினரோ, ஜோதிகா பேசியது தவறே இல்லை என்றும் கூறுகிறார்கள். சமீப காலமாக நடிகர்கள், நடிகைகள் மதம் சார்ந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து விட்டு பிறகு வாங்கி கட்டிக்கொள்கிறார்கள். யாருடைய மனதை குளிர்விக்க இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஜோதிகா சொன்ன அதே விஷயத்தை, மக்கள் எல்லாம் சினிமா பார்த்து எங்களை போன்றவர்களை வாழ வைக்கிறீர்கள். அதே போல ஸ்கூல், ஹாஸ்பிடல் கட்டவும் காசு கொடுங்கள் என்று கூறியிருந்தால் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. ஆனால், ஜோதிகா பேசியது, குறிப்பிட்ட மதம் சார்ந்த நம்பிக்கையில் குற்றம் சொல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பேசப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை.

இதனை யார் வேண்டுமானலும் இல்லை என்று மறுக்கலாம். ஆனால், அப்படி மறுப்பவர்களுக்குமே உண்மை என்ன என்று நன்றாவே தெரியும். இதேபோன்ற ஒரு கருத்தை பல அரசியல் தலைவர்களும் கூறியுள்ளார்கள். ஆனால், அவர்கள் யாரும் குறிப்பாக இந்த கோயில் என்று குறிப்பிட்டு கூறியது கிடையாது. ஆனால், ஜோதிகா அவர்கள் வெளிப்படையாக தஞ்சை பெரிய கோயில் குறித்து பேசியது துரதிர்ஷவசமானது தான்.

ஒருவேளை அந்த மருத்துவமனைக்கு ஜோதிகா சென்றது தொண்டு செய்வதற்கு என்றால் அவர் அப்படி கூறியிருக்கலாம். அவர் சென்றதோ சினிமா படப்பிடிப்பிற்கு என்ற போது சினிமாவையும், அதற்கு மக்கள் செலவு செய்யும் பணத்தையும் ஒப்பிட்டு ஒரு எடுத்துக்காட்டை கூறியிருக்க வேண்டும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை கொச்சைப்படுத்தும் விதமாக ஜோதிகாவின் பேச்சை எதிர்கிறேன் பேர்வழி என சிலர் மோசமான மற்றும் அவதூறான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் ஒன்று தான், நடிகர் விக்ரம், ஜோதிகா மற்றும்  சூர்யா இடையே நடந்ததாக கூறப்படும் ஒரு விஷயம். சூர்யா, ஜோதிகா நிச்சயதார்த்தம் முடிந்த பின் நடிகை ஜோதிகா விக்ரமுடன் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் தனியறையில் தங்கியிருந்தாதாகவும் இதனை அறிந்த நடிகர் சூர்யா விக்ரமுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு ஜோதிகாவை அழைத்து வந்ததாகவும் சில தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் சிலர் பரப்பி வருகிறார்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்க்கான எந்த ஆதாரமும் இப்படியான குற்றசாட்டை வைப்பவர்கள் கொடுக்கவில்லை. உண்மையாக இருந்தால் தானே ஆதாரம் கொடுப்பதற்கு..?. ஒரு தனிப்பட்ட நபர் மீது இப்படியான போலியான தகவல்களை பரப்புவது தனி மனித தாக்குதலாக தான் பார்க்க முடியும். 

அடிப்படை ஆதாரம் அற்ற இது போன்ற தகவல்களை பரப்புவது மிகவும் தவறானது. ஒருவருடைய கருத்தில் மோதல் என்றால் அதை எதிர்க்கருத்து மூலமாகவே தீர்வை எட்ட முனைய வேண்டும். தவிர இப்படி அவதூறுகளை பரப்பி தீர்வை எட்ட முயற்சிக்க கூடாது என்பதே பலரது கருத்தாக உள்ளது.
Powered by Blogger.