நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தில்லாக ஒப்புக்கொண்ட ப்ரியாமணி..! - ரசிகர்கள் ஷாக்..!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரியாமணி. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸ் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தெலுங்கில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "அசுரன்" படத்தின் ரீமேக்காக உருவாக்கி 'நரப்பா' என்ற படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக அதாவது அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியாமணி.
அதேசமயம், வரலாற்று படமாக உருவாகி வரும் 'விராட பருவம் 1992' என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் ஹீரோவாக பாகுபலி வில்லன் ராணா நடிக்கிறார்.
இந்த படத்தை ஹீரோயின்கள் பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தில்லாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆம், இந்தப்படத்தில் நக்சலைட்டாக நடிப்பதாக கூறியுள்ளார் பிரியாமணி. இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படமாகும்.
நக்சலைட் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.