"நாள் முழுசும் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு..!" - ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ஸ்ரீ திவ்யா..!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இளம் நாயகர்களின் தேர்வாக இருந்தார். ஆள் வளராதது போலவே கேரியரும் வளராமலேயே காலியானது.
ஊதா கலர் ரிப்பன் மூலம் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஸ்ரீதிவ்யாவுக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. ஸ்ரீதிவ்யாவுக்கு பின் வந்த கீர்த்தி சுரேஷ் போன்றோர் விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை ஆக, ஸ்ரீதிவ்யாவைக் கண்டுகொள்ள ஆள் இல்லை.
அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த படம் மட்டுமே ஸ்ரீதிவ்யா கையில் இருக்கிறது. அதுவும் அப்படியே நிற்கிறது. இவருக்கு தொடர்ந்து பட வாய்புகள் வராமல் போனதற்கு காரணம் இவர் கவர்ச்சிக்கு தடா போடுவது தான். மேலும், நான் கவர்ச்சியாக நடிப்பேன்.
ஆனால், அதற்கு என் உடல் வாகு செட் ஆகாது என்று கூறுகிறார்அம்மணி. பட வாய்புகள் இல்லை என்றாலும் ரசிகர்கள் தன்னை மறந்து விட கூடாது என்பதற்காக அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று தாவணி பாவடையில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் ஸ்ரீதிவ்யா.