தன்னுடைய பெயரில் தீயாய் பரவிய அந்த வீடியோ - பிக்பாஸ் லாஸ்லியா கொடுத்த பதிலை பாருங்க..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியால் பலதரபட்ட ரசிகர்களை பெற்றார். 

பலரும் எதிர்பார்த்தது போல இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கவும் களம் இறங்கிவிட்டார். ஆரியுடன் ப்ரண்ட்ஷிப் என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹர்பஜன் சிங் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் லொஸ்லியாவின் ஆபாச வீடியோ என 20 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், அந்த மாதிரியான வலைதளங்களிலும் இந்த வீடியோவை அப்லோட் செய்து விட்டார்கள். அந்த தளங்களில் இவரது பெயரை தேடினால் முதலாவதாக வந்து நிற்கிறது அந்த வீடியோ. 

இந்த வீடியோவில் இருக்கும் பெண் லொஸ்லியா-வை போலவே இருக்கிறார். ஆனால், உற்று கவனித்தால் அது லொஸ்லியா இல்லை என்பது தெரியும். இந்த வீடியோவை பார்த்த எல்லோருக்கும் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போவார்கள். 

சினிமாவில் இப்போது தான் அறிமுகமாகியுள்ள லொஸ்லியாவின் பெயரை கெடுக்கவே ஒரு சிலர் இப்படி ஒரு வேலையை பார்ப்பதாக சொல்கிறார்கள். இந்த விஷம் செயலை செய்தவர்களுக்கு லொஸ்லியாவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். 


அவர் கூறியுள்ளதாவது, "பொய்கள் நிறைந்த உலகம் இது. நம் எல்லோருக்குள்ளும் பிரகாசமான சில விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு கட்டத்தில், நாம் நம்முடைய ஆத்மாவுடன் மட்டுமே தனித்து இருக்கிறோம் என்று புரிந்துகொள்கிறோம்.இந்த உலகம் அச்சத்தாலும், எதிர்மையை எண்ணங்களாலும், ஒருவர் இப்படித்தான் என்று எளிதாக முடிவு செய்து விட கூடியதாகவும் இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் மாற வேண்டும் என்று நான் நினைக்கிறன்" என கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.