அட்லியின் படத்தை பார்த்து மிரண்டு போய் வாழ்த்து கூறிய மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் - என்ன படம் தெரியுமா...?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி,மாநகரம் என இரண்டு ஹிட் படங்களை இயக்கி விட்டு தற்போது மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்துள்ளார்.இந்த படம் லாக் டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்ததும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இயக்குனர் அட்லி தயாரிப்பில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள "அந்தகாரம்" திரைப்படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ் படத்தை பார்த்து மிரண்டு போய் வாழ்த்து கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, அட்லி தயாரித்துள்ள அந்தகாரம் படத்தை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில்
மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்திருக்கிறது. இந்த
லாக்டவுனில் அந்த படத்தை பார்த்து மிரண்டு போன லோகேஷ் கனகராஜ், இயக்குனர் விக்னராஜன்
எழுத்துக்கு ரசிகர் என பதிவிட்டுள்ளார். படம் ரொம்ப சூப்பர் என்று பாராட்டியுள்ளார்.
"அந்தகாரம்" படமும் லாக் டவுன் காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை லோகேஷ் கனகராஜிற்கு அனுப்பி பார்க்க வைத்துள்ளது படக்குழு.
கைதி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன்தாஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.