"விஜய்யுடன் நடிக்க ஆசை - ஆனால், அஜித்துடன் நடித்தால்...." - நடிகர் பிரசன்னா ஓப்பன் டாக்..!


அஜித் நடிப்பில் உருவாகி வரும் 60வது திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி, வலிமை திரைப்படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறது. 

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், நடிகர் அஜித்துடன் நடிக்கும் நடிகர்களின் பெயரை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. 

ஆனாலும், சமூகவலைதளங்களில் வலிமை திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிறது. அது உண்மை செய்தியா அல்லது வெறும் வதந்தியா என அஜித் ரசிகர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 

வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் வில்லனாக பிரசன்னா நடிக்க இருக்கிறார் என சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால், அஜித்துடன் வலிமை படத்தில் இணைந்து மிகவும் ஆசையுடன் காத்திருந்ததாகவும். ஆனால், வாய்ப்பு அமையவில்லை எனவும் ட்விட்டரில் கவலை தெரிவித்திருந்தார் நடிகர் பிரசன்னா. மேலும், அஜித்துடன் நடித்தால் வில்லனாக தான் நடிப்பேன் எனவும் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் தளபதியுடன் நடிக்க ஆசையில்லையா..? என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பிரசன்னா " தளபதியுடன் நடிக்க வானளவிற்கு ஆசையும், எதிர்பார்ப்பும் உள்ளது" என கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.