ஓ.. அப்படியா விஷயம்..! சூர்யா படத்திற்கு "Red Card" - இனி தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகாது..! - பரபரப்பு தகவல்கள்..!
ஆரம்ப காலம் முதலே தியேட்டார் உரிமையாளர்களுக்கும், ஆன்லைன் டிஜிட்டல் பிளாட்பார்ம்களான நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்களுக்கு வாய்க்கா தகராறு இருந்து வருகின்றது.
இது போன்ற ஆன்லைன் டிஜிட்டல் தளங்கள் தியேட்டருக்கு ஆப்பு வைக்கும் வகையில் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சேரன் முன் வைத்த சினிமா to ஹோம் என்ற ஐடியாவை கடுமையாக எதிர்த்தனர் தியேட்டார் உரிமையாளர்கள்.
தொலைக்காட்சி வந்த போது திரையரங்குகள் பாதி அழிந்து விட்டன. இப்போது, இப்படியான ஆன்லைனில் படங்களை வெளியிட்டால் இருக்கும் திரையரங்குகளும் அழிந்து விடும் என்பது அவர்களை குற்றசாட்டு.
இந்நிலையில், நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா அவர்கள் நடித்த "பொன்மகள் வந்தாள்" திரைப்படத்தை கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை. 4.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை ஊரடங்கு முடிந்து வெளியிட்டாலும் ஜோதிகா சமீபத்தில் ஒரு விருது விழாவில் தேவையான ஒரு விஷயத்துக்கு தேவையில்லாமல் தஞ்சை பெரிய கோயிலை எடுத்துக்காட்டாக கூறி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
இப்படியான சூழ்நிலையில் படத்தை வெளியிட்டால் 4.5 கோடியும் ஸ்வாஹா ஆகிவிடும் என்று பயந்து போன சூர்யா அந்த படத்தை கொரோனா ஊரடங்கை காரணம் காட்டிஅமேசான்பரைம்-ற்கு 9 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார்.பாதிக்கு பாதி லாபம் என்றால் யார் தான் விடுவார்கள்.
இந்நிலையில், படத்தை திரையரங்குகளுக்கு விற்காமல் நேரடியாக ஆன்லைனில் விற்பனை செய்த சூர்யாவை கண்டித்து இனி சூர்யா நடித்த மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெய்மென்ட் நிறுவனம் தயாரித்த திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளனர் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர்.