தன்னுடைய சினிமா வரலாற்றில் தல அஜித் முதன் முதலில் நடித்த காட்சி இது தான் - இதோ புகைப்படம்..!


தல அஜித் திரையுலகில் மிக பெரிய இடத்தை தனது சொந்த முயறிச்சியினால் மற்றும் தனது சிறந்த நடிப்பினால் பிடித்துள்ளார் என்று அது.. இது என சொல்லிக்கொண்டே போகலாம். 

இவர் தற்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் இரண்டாம் முறையாக கூட்டணி அமைத்து "வலிமை" எனும் படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் ரிலீஸ் தேதியை தீபாவளி 2020-ஐ மனதில் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம். ஆனால், படம் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. இடையில், ஒன்றரை மாதம் லாக் டவுன் வேறு.

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். ஆனால், இந்த படத்தை அடுத்த பொங்கலுக்கு தள்ளி வைத்து விட்டார்கள் என சில தகவல்கள் கசிந்துள்ளன. தல அஜித்தின் முதல் படம் அமராவதி என்பதனை நாம் அறிவோம். 

ஆனால், என் வீடு என் கணவர் என்ற படத்தில் பள்ளிச்சிறுவனாக அஜித் நடித்த முதல் காட்சியை பலரும் பார்த்திருக்க மாட்டோம். இதோ அந்த காட்சியின் புகைப்படம்...

Powered by Blogger.