கொரோனா ஊரடங்கு - ஆன்லைனில் ரிலீசாகும் ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்த திரைப்படம்..! - எத்தனை கோடிக்கு விற்றுள்ளார்கள் தெரியுமா..?
கொரோனா ஊரடங்கால் உலகம் முழுதும் பல தொழில்கள் முடங்கி உள்ளன. அதில், கோடிகளில் புரளும் சினிமாவும் ஒன்று. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதை விட ஏற்கனவே படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருந்த படங்கள் தான் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சினிமா தியேட்டர்கள் திறக்க ஜுன், ஜுலை ஆகும் என்கிறார்கள். அப்படியே திறக்கப்பட்டாலும் சின்ன படங்களுக்கு மீண்டும் தியேட்டர் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.
அப்படியே கிடைத்தாலும் மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. இதெல்லாம், கதைக்கு ஆகுற மாதிரி தெரியவில்லை என படங்களை நல்ல விலைக்கு ஆன்லைன் தளங்களில் வெளியிட பல தயாரிப்பு நிறுவனங்கள் பேசி வருகின்றனர்.
தற்போது மக்களும் வீட்டில் முடங்கி உள்ளதால் இந்த முடிவுக்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சூர்யா தனது சொந்த பணத்தை போட்டு தயாரிக்க அவரது மனைவி ஜோதிகா நடிப்பில், இயக்குனர் பெரட்ரிக் இயக்கத்தில் உருவாகி உள்ள 'பொன்மகள் வந்தாள்' படத்தை ஆன்லைன் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியிட உள்ளனர்.
சுமார் ரூ.4.50 கோடியில் தயாரான இப்படத்தை ரூ.9 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை மே முதல் வாரத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.