நீங்க கூல் லிப் பயன்படுத்துகிறீர்களா..? - புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட நடிகை..!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
மேலும் இவர் பாலிவுட்டில் நீரஜா என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகை சோனம் கபூர் பிரபல தொழிலதிபரான ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் திருமணம் முடிந்த சில காலங்கள் ஓய்வில் இருந்த சோனம் கபூர் தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். லாக்டவுன் காலத்தில் நடிகைகள் பலரும் தங்களுடைய பழைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இவரும் தன் பங்கிற்கு தன்னுடைய பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க கூல் லிப் பயன்படுத்துகிறீர்களா..? என்று கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.